தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்துச் செல்லப்பட்ட துயரம்

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆறு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

News image

கொள்ளிடம் ஆறு

Updated On :3 அக்டோபர் 2022, 10:36 am

DIN


தஞ்சை: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆறு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், அடித்துச் செல்லப்பட்டவர்களில் இரண்டு பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன 4 பேரை மீட்புப் படையினர் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடியிலிருந்து சுற்றுலா வந்த 6 பேரில் இரண்டு பேரின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா கோயிலுக்கு வந்த பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

மீட்கப்பட்டவர்களின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரை கலங்கச் செய்தது. மறுபக்கம் காணாமல் போன 4 பேரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.