
மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள்.
தமிழர்களை மீட்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தாய்லாந்துக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டனர். மோசடி கும்பலில் சிக்கிய 13 தமிழர்களும் மீட்கப்பட்டு தாய்லாந்து அழைத்து வரப்பட்டனர்.
இதையும் படிக்க: உலகக் கோப்பையிலிருந்து விலகிய பும்ரா என்ன சொல்கிறார்?
பாங்காங்கில் இருந்து 13 தமிழர்களும் விமானம் மூலம் புறப்பட்டு இன்று இரவு சென்னை திரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.