நீடாமங்கலம்: ரூ. 3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அடிக்கல் நாட்டினார்.
இதற்கான நிகழ்ச்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் கோ.பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைத்தலைவர் ரா.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் டி.எஸ்.டி.முத்துவேல், மாவட்ட வளர்ச்சி குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் நா.கவியரசு, கே.வி.கே.ஆனந்த், வை.மாயவநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ராணி சுந்தர், சங்கீதா செல்வேந்திரன், கலைவாணி மோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிமுக ஆதி.ஜனகர், இந்திய கம்யூனிஸ்டு க.பாரதிமோகன்,த.மா.க. மேனகா கார்த்திகேயன், திமுக நடனசிகாணி உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒன்றிய ஆணையர் ரா.சுப்பிரமணியன் வரவேற்றார். நிறைவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அன்று அனிருத் செய்த உதவி... கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!

பும்ராவின் முதல் ஓவரை அடித்து என் மீதான அழுத்தத்தை சூர்யவன்ஷி நீக்கினார்: ஜெய்ஸ்வால்

வயதானாலும் இளமையுடன் இருக்க வேண்டுமா? இந்த 6 விஷயங்களைக் கடைப்பிடியுங்கள்!

ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


