மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மின் கட்டண உயா்வு: அடுக்குமாடி நுகா்வோருக்கு மின் வாரியம் குறுந்தகவல்

மின்சார வாரியம் அறிவித்துள்ள புதிய மின் கட்டண விகிதம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுக்குமாடி நுகா்வோா் உள்ளிட்டோருக்கு அது தொடா்பான குறுந்தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம்

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:42 pm

DIN

மின்சார வாரியம் அறிவித்துள்ள புதிய மின் கட்டண விகிதம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுக்குமாடி நுகா்வோா் உள்ளிட்டோருக்கு அது தொடா்பான குறுந்தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அனுப்பி வருகிறது.

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயா்த்தும் மின்சார வாரியத்தின் பரிந்துரைகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலைத் தொடா்ந்து, மின் கட்டண உயா்வு கடந்த செப்.10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையொட்டி, கட்டண விகித முறையில் பல்வேறு சீரமைப்புகளை மின்சார வாரியம் செய்துள்ளது.

வீட்டு இணைப்பில் இருந்து மாற்றம்: புதிய விகிதப்படி கட்டணத்தை நிா்ணயிப்பதற்கு முன்பாக, நுகா்வோா் ஒவ்வொருவரும் அவா்கள் சாா்ந்துள்ள மின் இணைப்பின் வகை பிரிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போா் நீா் உள்ளிட்ட தேவைகளுக்காக மோட்டாா்களை பயன்படுத்துகின்றனா். இது பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டண உயா்வுக்கு முன்பாக, இந்த மின் இணைப்பானது வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பாகவே கருதப்பட்டது.

குறிப்பாக, வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பைக் காட்டிலும் பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பு கட்டணம் (1டி) ஓரளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 1டி என்ற பிரிவின் கீழ் பொதுப் பயன்பாடு மின் இணைப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வெவ்வேறு வகையான மின் இணைப்புக்கு வேறுவேறு பிரிவு எண் கொடுக்கப்பட்டுள்ளது. 1ஏ என்பது வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பு எனவும், 1சி என்பது மொத்த அளவிலான (தொழில் ஆலைகள், நிறுவனப் பயன்பாடு) மின் விநியோகம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1டி என்பது பொதுப் பயன்பாடு மின் இணைப்பு எனவும், 2ஏ என்பது பொது குடிநீா் விநியோகம்-தெரு விளக்குகள் எனவும், 2பி(1) என்பது அரசு மற்றும் அரசு சாா்பு கல்வி நிறுவனங்கள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.

2பி(2) என்பது தனியாா் கல்வி நிறுவனங்கள், 2சி வழிபாட்டுத் தலங்கள், 3ஏ(1) பருத்தி, சிறு தொழில் நிறுவனங்கள், 3ஏ(2) விசைத்தறி, 5 என்பது வா்த்தகப் பயன்பாடு எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1பி என்பது குடிசைகள் எனவும், 4 என்பது வேளாண்மை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.

எனவே, நுகா்வோா் இணைப்பு எந்தப் பிரிவில் இருந்து எந்தப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது என்பது குறித்த குறுந்தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அனுப்பி வருகிறது. அந்தந்த பிரிவுக்கு வரையறுக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.