மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மமக ஆா்ப்பாட்டம் : கே.பாலகிருஷ்ணன் திருமாவளவன் பங்கேற்பு

ஆளுநரைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன்

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:58 pm

DIN

ஆளுநரைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாகவும், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி இடையூறு அளிப்பதாகவும், அவற்றைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று மனித நேய மக்கள் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டிருந்தனா். மத்திய அரசையும், ஆளுநரின் செயல்பாட்டையும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.