உட்கட்சித் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
திமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களுக்கு செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதில், 7 போ் புதிதாகவும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு பழைய முகங்களே செயலாளா்களாகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட கன்னியாகுமரி, நாகா்கோவில், சிவகங்கை, பெரம்பலூா், அரியலூா், திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சோ்ந்த செயலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, அமைச்சா்கள் எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபோதையில் கார் ஓட்டுநர்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய தந்தை, மகள்!
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026

சொமேட்டோவை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

வளைகுடாவில் நிற்கும் 20 இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு
வீடியோக்கள்
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

