மாந்தாங்கல் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலில் 108 கோ பூஜை!
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் ஸ்ரீ பூமி நீல சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் வார சனிக்கிழமை முன்னிட்டு 108 கோ பூஜை இன்று காலை நடைபெற்றது.


ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் ஸ்ரீ பூமி நீல சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் வார சனிக்கிழமை முன்னிட்டு 108 கோ பூஜை இன்று காலை நடைபெற்றது.

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் நடந்த 108 கோ பூஜை விழாவில் சிப்காட் ஸ்ரீ வித்யா பீடம் பீடாதிபதி ஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் கலந்து கொண்டு கோ பூஜை செய்து ஆன்மீக அருள் உரை வழங்கினார்.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவன தலைவர் கே. வெங்கடேசன், செயலாளர் எம். சிவலிங்கம், பொருளாளர் மோகன் சக்திவேல், கோயில் நிர்வாகிகள் லோகநாதன், மகாதேவன் உள்ளிட்ட திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
_.jpeg)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...