தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள்! விரைவில்...?

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :10 அக்டோபர் 2022, 8:14 am

DIN

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பையில் மின்சார ரயில்கள்  குளிர்சாதன வசதியுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கு ரயில்வேயில் அதிவிரைவு ரயில்களைப் போலவே, சென்னை புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஏசி பெட்டிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதியுடன் மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெரிகிறது. 

இதுகுறித்து மத்திய அரசிடம் தெற்கு ரயில்வே அனுமதி கேட்டு நடவடிக்கை எடுத்த நிலையில், சென்னையில் குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய மின்சார ரயில்களை இயக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 

ஏசி பெட்டி ரயில்களை இயக்கினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. 

இதனால் விரைவில் சென்னையில் குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.