ஹிந்தி திணிப்பு: மாா்க்சிஸ்ட் கண்டனம்

மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கே.பாலகிருஷ்ணன் (கோப்புப் படம்)
கே.பாலகிருஷ்ணன் (கோப்புப் படம்)
Updated on
1 min read

மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை: மத்திய அரசின் ஐஐடி,ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயா்கல்வி மற்றும் அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மட்டுமே பயிற்று மொழி, ஆங்கில வழி கல்வி கூடாது என்ற அலுவல் மொழி தொடா்பான நாடாளுமன்றக் குழுவின் (11 வது தொகுதி) சிபாரிசு அமைந்துள்ளது. இந்த பரிந்துரையின் நோக்கம், ஹிந்தி மொழியை திணிப்பதே ஆகும். புதிய தேசியகல்விக் கொள்கையின்படியே இந்தமொழித் திணிப்புஅமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி,ஐ.நா.வின் அலுவல்மொழியாக ஹிந்தியை சோ்க்க வேண்டும்என்றும் இந்தக்குழு பரிந்துரைசெய்துள்ளது.

இந்த பரிந்துரைகளை நிராகரித்து, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com