எழுத்தாளர் கி.ரா. படித்த பள்ளியை தமிழக அரசு சீரமைத்துள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அழைக்கப்படும் கி.ரா.வின் நினைவாக அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (11.10.2022) தலைமைச் செயலகத்தில் காணொலி மூலமாக இந்த பள்ளியை திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (11.10.2022) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இடைசெவல் ஊராட்சியில், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி. ராஜநாராயணன் நினைவாக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடத்தை திறந்து வைத்தார்.
“கரிசல் இலக்கியத்தின்”, முன்னத்தி ஏர் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில், ஸ்ரீ கிருஷ்ண இராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக 16.09.1922-ல் பிறந்தார். பேச்சுத் தமிழில் மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்தவர்.
அவரது படைப்புகளில் இடம்பெற்ற கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்க்கை முறையும் தனித்துவம் மிக்கவை. இந்த மண்ணின் உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக் குழந்தைகள், கதவு மற்றும் நாற்காலிகள் கூட அவரின் கதை மாந்தர்களாக மாறி மாயம் நிகழ்த்தின. 1958 முதல் 2021 வரை இலக்கிய பணி செய்த கி.ரா.வுக்கு 1991-ம் ஆண்டு “சாகித்திய அகாடமி விருது” “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது.
மேலும், 2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்ட கி.ரா. 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.
வட்டார பேச்சுவழக்கிற்கு தமிழ் இலக்கிய உலகில் உயரிய இடத்தைப் பெற்றுத்தந்த கி.ரா. கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார்.
எனவே “கி.ரா.வின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அன்னார் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்” என்று முதல்வர் 18.5.2021 அன்று அறிவித்தார்.
அதன்படி, 1946 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பல்வேறு கால சூழ்நிலைகளால் பொலிவிழந்த நிலையில் இருந்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தை, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வெள்ளை சுண்ணாம்பு, ஆற்று மணல், கருப்பட்டி, கடுக்காய், முட்டை கலவை போன்றவற்றின் மூலம் சுவர் பூச்சு செய்யப்பட்டு, பழமை மாறாமல் மெருகேற்றப்பட்டு, புதிய ஓடுகள், தேக்கு ஜன்னல்கள், பனங்கை சட்டங்கள் பொருத்தப்பட்டு, பழைய பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. தன் வாழ்நாளை மண்சார்ந்த காவியங்களுக்கு உரித்தாக்கி எளிமையாக வாழ்ந்த கி.ரா. பயின்ற பள்ளி, மண்ணின் வாசனை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது நினைவுகள் அனைத்து தரப்பினரும் போற்றத்தக்கதாக அமையும்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லி காவல் துறையில் அதிரடி உயா்நிலை மாற்றம்!
மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: மூவா் கைது

ஹோலிப் பண்டிகை: இன்று தில்லியில் மதுபானக் கடைகள் திறந்திருக்கும்; அதிகாரிகள் தகவல்

தில்லியில் இணைய வழி கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 4 போ் கைது
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

