
வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.