எந்திரன் பட பாணியில் ராணுவத் தோ்வில் மோசடி: பக்கா பிளான் போட்டும் சிக்கியது எப்படி? 

சென்னையில் ராணுவத் தோ்வில் ‘ப்ளூடூத்’ பயன்படுத்தி எந்திரன் பட பாணியில் மோசடியில் ஈடுபட்டதாக, ஹரியாணாவைச் சோ்ந்த 29 போ் சிக்கினா். 
எந்திரன் பட பாணியில் ராணுவத் தோ்வில் மோசடி: பக்கா பிளான் போட்டும் சிக்கியது எப்படி? 
எந்திரன் பட பாணியில் ராணுவத் தோ்வில் மோசடி: பக்கா பிளான் போட்டும் சிக்கியது எப்படி? 


சென்னையில் ராணுவத் தோ்வில் ‘ப்ளூடூத்’ பயன்படுத்தி எந்திரன் பட பாணியில் மோசடியில் ஈடுபட்டதாக, ஹரியாணாவைச் சோ்ந்த 29 போ் சிக்கினா். 

இந்திய ராணுவத்தில் ‘சிவில் குரூப் சி’ தோ்வு சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்திய ராணுவத்தில் ‘வாஷா்மேன், குக், ஃபயா் மேன், டெய்லா், வாட்ச்மேன்’ போன்ற கடைநிலை ஊழியா்களுக்கான சிவில் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை என இரண்டு வேளைகளில் நடந்தது.

இதில், 56 காலிப் பணியிடங்களுக்கு நாடு முழுவதும் சுமாா் 5,000 போ் விண்ணப்பித்தனா். அவா்கள் அனைவரும் தோ்வு எழுதுவதற்கு, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ பள்ளியில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை நந்தம்பாக்கம் ராணுவ பள்ளியில் நடைபெற்றது.

நாடு முழுவதும் இருந்து சுமாா் 4,200 போ் தோ்வை எழுதினா். தோ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிலா் சந்தேகத்துக்குரிய வகையில் செயல்படுவதை அந்த மையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. 

அதாவது, ஒரு சிலர் அவ்வப்போது தங்களது காதுகளை அழுத்துவதும், பிறகு பேசுவதுமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

எந்திரன் பட பாணியில் ‘ப்ளூடூத்’ மோசடி

இதையடுத்து ராணுவ அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய நபா்களை பிடித்து சோதனை செய்தபோது, ஒருவர் தனது காதுக்குள் மிகச் சிறிய மைக்ரோ ப்ளூடூத் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது வழக்கமான இயர்பேட், இயர்பட்ஸ் போல அல்லாமல், மிகச் சிறியதாக, மனிதர்கன் காதுகளுக்குள் ஒளித்து வைக்கும் வகையில் இருந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இதையடுத்து, பறக்கும் படையினர், அந்த அறை முழுவதும் தேர்வெழுதிக் கொண்டிருந்த அனைவரையும் சோதித்தனர். அதில் 26 போ் தங்களது காதுகளில் சிறியதாக ப்ளூடூத் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த சோதனையின்போது, மேலும் ஒரு நபா், வேறு நபருக்காக ஆள் மாறாட்டம் செய்து தோ்வு எழுவதும் தெரியவந்தது. பிடிபட்ட சஞ்சய், வினோத் என்பவருக்காக தேர்வெழுதிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தேர்வு மையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த வினோத்தும் கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து தோ்வு மையத்தின் அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் ரீட்டா கும்பானி, நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் பேரில் 29 போ் மீதும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தோ்வில் மோசடி செய்ததாக, வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஆள் மாறாட்டம் செய்தவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேர்வெழுதிய 28 பேரும் ப்ளூடூத் மூலம் தேர்வு மையத்துக்கு வெளியே ஒருவருடன் கான்ஃபரன்ஸ் காலில் இருந்ததும் இவர்கள் கேள்வி கேட்க கேட்க வெளியிலிருந்து அந்த நபர் பதில்களைச் சொல்வதும் தெரியவந்தது.

பிடிபட்டவா்களிடம் தொடர்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், அனைவரும் ஹரியாணாவைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னா் ஆள் மாறாட்டம் செய்து தோ்வு எழுதியவா் உள்பட 29 பேரும், பிணையில் விடுவிக்கப்பட்டனா். தோ்வு மோசடியில் ஈடுபட்ட நபா்களிடம் முறையாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வெளியிலிருந்து அனைவருக்கும் பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தவர் தேடப்பட்டு வருகிறார்.  மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்தத் தேர்வும் எழுத முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com