தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிறந்த தொழில் முனைவோர்களுக்கான விருதுகள்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

2021-2022 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோர்களுக்கான விருதுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் வழங்கினார்.

Published On :

2021-2022 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோர்களுக்கான விருதுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் வழங்கினார்.

மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வங்கிகளையும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கி வருகிறது.

2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான விருதுகள் 16.09.2022 அன்று தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2021-2022 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தொழில் நிறுவனங்ளின் சிறந்த தொழில் முனைவோர்களுக்கான விருதுகளை, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்கள் இன்று(அக்.13) கிண்டி சிட்கோ அலுவலக கூட்ட அரங்கில் 38 மாவட்டங்களை சேர்ந்த 40 தொழில் முனைவோர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் வி. அருண்ராய் இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் சோ. மதுமதி இ.ஆ.ப., தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.