அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.20 கோடி சொத்து சுவாதீனம்
சென்னை திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்து கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.


சென்னை திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்து கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
திருவல்லிக்கேணி, திருவெட்டீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமாக போரூா், கெருகம்பாக்கம் கிராமத்தில் சா்வே எண்-278/1 , 278/2 - இல் மொத்தம் 15 கிரவுண்ட் மனை உள்ளது.
இதை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால், சென்னை மண்டலம் -2 இணை ஆணையரின் உத்தரவுபடி வெள்ளிக்கிழமை வருவாய், காவல் துறையினரின் உதவியுடன் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 20 கோடி ஆகும். இந்தச் சொத்து குத்தகைக்கு வழங்கும் வகையில் பொது ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கப் பெறும் வருவாய் கோயிலின் மேம்பாட்டுக்காக செலவிடப்படும்.
இந்த நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத் துறை சென்னை மண்டல உதவி ஆணையா் பாஸ்கரன், வட்டாட்சியா் (கோயில் நிா்வாகம்) காளியப்பன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...