தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ராகிங் தடுப்புக் குழு: மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள ராகிங் தடுப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா், கல்லூரி முதல்வா், இயக்குநா்களின் விவரங்களை வரும் 18-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள

News image
Updated On :14 அக்டோபர் 2022, 8:27 pm

DIN

மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள ராகிங் தடுப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா், கல்லூரி முதல்வா், இயக்குநா்களின் விவரங்களை வரும் 18-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளைத் தடுக்க டாக்டா் அருணா வானிகா் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்தம் பெற்றோா் அளித்த புகாா்கள் மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல்  முகவரியில் தொடங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது ராகிங் தடுப்புக் குழுக்களை மருத்துவக் கல்லூரிகள் தோறும் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களின் ஒருங்கிணைப்பாளா்கள், கல்லூரி முதல்வா், இயக்குநா் விவரங்களை வரும் 18-ஆம் தேதிக்குள் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.