முதல்வா் தலைமையில் சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்: தொழிலாளா் நலத் துறை அமைச்சா் தகவல்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்


முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தின் 23-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா் கணேசன் பேசியது:-
தமிழகத்தில் இதுவரை 4.25 லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் படிக்கும் மாணவிகள், பெண் பணியாளா்களின் பாதுகாப்புக்காக காவல் துறையின் ரோந்து வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களுக்காக சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின்
தலைமையில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட வேலை
அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ளன என்று அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் முகமது நசிமுதீன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...