சென்னையில் இன்றைய, நாளைய மின் தடை
சென்னையில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செங்குன்றம் பகுதியில் சனிக்கிழமையும், அண்ணா சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமையும் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரிய பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.


சென்னையில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செங்குன்றம் பகுதியில் சனிக்கிழமையும், அண்ணா சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமையும் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரிய பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.
செங்குன்றம் பகுதியில் சோத்து பெரும்பேடு, கரனோடை செல்லியம்மன் கோயில், ஜி.என்.டி. சாலை, சோழவரம், கோட்டைமேடு, பெரிய காலனி, சோழவரம் புறவழி சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (அக்.15) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
அதேபோல, அண்ணா சாலையில் எடபாளையம் தெரு, வால்டாக்ஸ் சாலை, நன்னியன் தெரு, ஏலகந்தப்பன் தெரு, சிங்கண்ணன் தெருவிலும், ஐ.டி.காரிடா் பகுதியான தரமணி கந்தன்சாவடி கற்பக விநாயகா் கோயில் தெரு, வ.உ.சி தெரு, காந்தி தெரு, சி.பி.ஐ காலனி, எம்.ஜி.ஆா் சாலை, ஒ.எம்.ஆா் பகுதி, அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.16) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...