உலக முட்டை நாள்: நாமக்கல்லில் 10,000 அவித்த முட்டைகள் இலவசமாக விநியோகம்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல்லில் பொதுமக்களுக்கு 10,000 அவித்த முட்டைகள் வெள்ளிக்கிழமை இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக முட்டை தின விழாவில் பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்ட அவித்த முட்டைகள்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக முட்டை தின விழாவில் பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்ட அவித்த முட்டைகள்.
Published on
Updated on
1 min read

நாமக்கல்: உலக முட்டை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல்லில் பொதுமக்களுக்கு 10,000 அவித்த முட்டைகள் வெள்ளிக்கிழமை இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும், உலக முட்டை தினம் அக்.14-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துக்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் முட்டை அனுப்பப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 5 கோடி முட்டையின கோழிகள் மூலம் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் தமிழகம், புதுவை, கேரளம் மற்றும் வடமாநிலங்களில் சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது,

முட்டையின் கொள்முதல் விலையை,  தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. முட்டையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, டி, இ, பி12, புரோட்டீன், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

உலக முட்டை தினத்தையொட்டி, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் , நாமக்கல்லில் உள்ள அதன் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் கே.சிங்கராஜ், செயலாளர் கே.சுந்தர்ராஜ், பொருளாளர் பி. இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு 10 ஆயிரம் அவித்த முட்டைகளை இலவசமாக விநியோகம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com