துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
துறையூர் அருகேயுள்ள ஒட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் நாகராஜ்(23). கேட்டரிங் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஏரி நீர் அளவையும், ஏரிக்கு நீர் வரும் அளவையும் பார்க்க சனிக்கிழமை சென்றார். அந்த சமயத்தில் அங்கு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
இதில் நாகராஜ் மின்னல் பாய்ந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து உப்பிலியபுரம் போலீஸார் அவரது சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


