நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அனைத்து நுழைவுத்தோ்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

Published On :

அனைத்து நுழைவுத்தோ்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் வெள்ளி, சனிக்கிழமைகளில் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீா்குலைக்கும் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் பொதுநுழைவுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் தோ்வாணையத்தின் கேள்வித் தாள்களில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.