வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ள நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வரத்து ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 68.50 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி).
அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 2,094 கன அடியாக உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 5,446 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் திட்டங்களுக்கும், பாசனக் கால்வாய்களிலும் விநாடிக்கு 699 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பொதுப் பணித் துறை சார்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிக்க: சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று பொதுப் பணித்துறை பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



