சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வீடுகளுக்குள் சூழ்ந்த நீர்!

அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2022, 2:46 pm IST

அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இரண்டு  நாள்களுக்கு முன்பு மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. 

காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர், முக்கொம்பு மற்றும் கல்லணையை வந்தடைந்ததும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.  இந்நிலையில் அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கியது. 

இதனால் கொள்ளிடம் ஆறு கடல்போல் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளப் பெருக்கால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான அணைக்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, உள்ளிக்கடை ஆகிய கிராமங்களின் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. 

இதனால் பட்டுக்குடி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. குறிப்பாக பழைய மன்னியாறு பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கியது. இப்பகுதிகளில் தற்போது நடவு செய்து அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை நெல் பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது. 

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் 5- வது முறையாக கொள்ளிடம் ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.