வால்பாறையில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்!
வால்பாறையில் யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.


வால்பாறையில் யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நல்ல காத்து எஸ்டேட் கரும்பாலம் பகுதியில் சோலையார் எஸ்டேட்டை சேர்ந்த துரைராஜ் வயது 51. இவர் இன்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து வந்த காட்டு யானை அவரை தள்ளியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.
மேலும், அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...