முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றிய விவகாரம்: கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

அம்பேத்கர் புகைப்படத்தை கல்லூரி அலுவலகத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி. பால் கிரேஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Published On :

நாமக்கல்: அம்பேத்கர் புகைப்படத்தை கல்லூரி அலுவலகத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி. பால் கிரேஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய டி.பால் கிரேஸ், திண்டிவனம் ஏ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அப்போது கல்லூரி அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை அவர் அகற்ற உத்தரவிட்டதாக தெரிகிறது.

Story image

இது தொடர்பான புகார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு சென்றது. அவர் தாழ்த்தப்பட்டோர் பிரிவு கமிட்டி முன்னிலையில் விசாரணை நடத்தி டி. பால் கிரேஸ் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரிக் கல்வி இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்தார்.

இதற்கிடையே அவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் நான்கு மாதங்களுக்கு முன் முதல்வராக பொறுப்பேற்றார். இங்கும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. பேராசிரியர்கள் தரப்பில் மனித உரிமை ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரிக் கல்வி இயக்குனரகம், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி. பால் கிரேஸை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த தகவல் அறிந்த நிலையில், அவர் கல்லூரியில் இருந்து வெளியே செல்ல மாட்டேன் என அங்கிருக்கும் பேராசிரியர்களிடம் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.