தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தில் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தில் வளர்க்கப்பட்ட 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளின் குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 1:17 pm

DIN

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தில் 360 நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்ட 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளின் குறித்து தலைமைச் செயலக வனத்துறை கூட்ட அரங்கில் இன்று (வியாழக்கிழமை) வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட, பசுமை தமிழக இயக்கத்தின் மூலம் நடப்பாண்டு, முதல் கட்டமாக 360 நாற்றங்கால்கள் மூலம் வளர்க்கப்பட்டுள்ள 2..80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக வேளாண் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதாகப் பெறும் பொருட்டு, பசுமை தமிழகம் இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் பயனாக இதுவரை 7,905 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். 12 ஆயிரத்து 705 மரக்கன்றுகள் இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் தன்னார்வலர்கள், வேளான் பெருமக்கள் வழங்கியள்ளார்கள். இவ்வாண்டு நடவு செய்யப்பட வேண்டிய 2.50 கோடி மரக்கன்றுகளையும் நடப்பு மழைக்காலத்திலேயே நடவு செய்திட அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். இரண்டாம் ஆண்டில் 7.5 கோடி மரக்கன்றுகளும், மூன்றாமாண்டு 15 கோடி மரக்கன்றுகளும், நான்காம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 25 கோடி மரக்கன்றுகளும் நடவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இயக்கத்தின் திட்டப்படி 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் நிலப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நடவு செய்யப்பட வேண்டிய மரக்கன்றுகளை வளர்க்கவும், நடவு செய்திடவும், முழுமையாக வளர்ந்திட குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சரியாக திட்டமிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.