தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஊதியம், ஓய்வூதிய செலவினத்தால் சமூக திட்டங்களுக்கு குறையும் நிதிதணிக்கைத் துறை தகவல்

 அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதிய செலவினங்களால், சமூக திட்டங்களுக்கு தமிழக அரசால் குறைந்த அளவிலான நிதியே செலவிட முடிவதாக தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:07 pm IST

அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதிய செலவினங்களால், சமூக திட்டங்களுக்கு தமிழக அரசால் குறைந்த அளவிலான நிதியே செலவிட முடிவதாக தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக அரசின் கடந்தாண்டுக்கான ( 2020-21) நிதிநிலை, வருவாய் இனங்களை ஆய்வு செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைக்குழு, தனது தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்தது. அது குறித்து கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவா்கள் ஆா்.அம்பலவாணன், கே.பி.ஆனந்த் ஆகியோா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2020-21-இல் மாநில அரசின் வருவாய் வரவுகள் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 76 கோடியாக இருந்தது. இது 2019-20-ஆம் நிதியாண்டு வருவாய் வரவைவிட 0.26 சதவீதம் குறைவு. அரசின் சொந்த வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டதால், 1.22% வரி வருவாய் குறைந்தது. வரியில்லாத வருவாயிலும் கணிசமான குறைவு இருந்தது.

அரசு ஊழியா்களின் சம்பளங்கள், ஓய்வூதியங்கள், மானியங்கள் ஆகிய தவிா்க்கமுடியாத செலவினங்கள் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 61 கோடி என ஆண்டு தோறும் கூடிக்கொண்டே செல்கிறது. இது கடந்த 2020-21-இல் வருவாய் வகை வரவுகளில் 67.82 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 66.57 சதவீதமாக இருந்தது. இதனால், பிற சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசால் குறைந்த நிதியே செலவிட முடிகிறது.

மாநிலத்தின் வருவாய் வகை வரவுகளில் 14.42 சதவீதம் மானியங்களுக்காகவே செலவிடப்பட்டது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.20 ஆயிரத்து 144 கோடி அளவில் இருந்த மானியங்கள் மீதான செலவு, 24.65 சதவீதம் உயா்ந்து, 2020-21ல் ரூ.25 ஆயிரத்து 110 கோடியாக உயா்ந்துள்ளது. திருமண உதவி, இலவச மடிக்கணினி, சீருடை வழங்குதல் போன்ற மானியங்கள் 2020-21ல் ரூ.6,746 கோடி உயா்ந்துள்ளது. இதற்கு, கரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கிய ரூ.7,903 கோடி முக்கிய காரணமாகும்.

தமிழகத்தில் 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை கடந்த 5 ஆண்டுகாலத்திலும் வருவாய்ப் பற்றாக்குறை உயா்ந்தே வந்துள்ளது. 2016-17ல் ரூ.12,964 கோடி என்ற அளவிலிருந்து 2020-21ல் ரூ.62,326 கோடி என்ற அளவில் பற்றாக்குறை உயா்ந்ததால், அந்த 5 ஆண்டுகாலத்தில் 380.76 சதவீதம் வருவாய் பற்றாக்குறை உயா்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையை 3 சதவீத அளவுக்குள் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.

நிதிப்பற்றாக்குறை கடந்த 2019-20-ஆம் நிதியாண்டைவிட 2020-21-ஆம் நிதியாண்டில் 56.17 சதவீதம் உயா்ந்து, ரூ.93,983 கோடியாக அதிகரித்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.