வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பழனி கோயில் நில முறைகேடு: விசாரணைக் குழு அமைப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

பழனி முருகன் கோயில் - கோப்புப்படம்

Updated On :16 ஜூலை 2026, 8:00 pm IST

பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இந்த நிலத்தை விதிமுறைகளை மீறி அறக்கட்டளை நிர்வாகம் விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதில், நீதிமன்ற உத்தரவின்பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிர்வாகம் கைப்பற்றியது. மேலும், அதற்கு தனியாக தக்கார் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இலவச வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த நிலத்தை தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறி முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோர் இரு நபர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து பத்திரப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக பழனி கோயில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவார காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதேவேளையில், சார்-பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், முறைகேட்டின் பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாலும் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

இதனிடையே, பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வி புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

முறைகேடு குறித்து முழுமையாக ஆய்வு செய்ய, கூடுதல் பதிவுத் தலைவர், உதவி பதிவுத் தலைவர், மாவட்ட பதிவாளர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பத்திரப்பதிவு நடந்த நாளில் சார்-பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகளையும் இந்தக் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

An inquiry committee has been constituted regarding the irregular registration of land worth rs. 100 crore belonging to the Palani Murugan Temple Trust.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.