FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றம்: தமிழக அரசு

பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பற்றி..

News image

பழனி மலைக் கோயில் - file photo

Updated On :15 ஜூலை 2026, 3:49 pm IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேடு செய்த வழக்கு விசாரணையை சிபி-சிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சாா் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பத்திரப்பதிவு செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை சிபி-சிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பழனி மலையடிவாரத்தில் தண்டயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விதிகளை மீறி அறக்கட்டளை நிா்வாகம் விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிா்த்து இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிா்வாகம் கைப்பற்றியது. மேலும், அதற்கு தக்காராக இணை ஆணையா் மாரிமுத்து நியமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை இலவச வாகன நிறுத்துமிடமாக மாற்றினாா்.

இந்த நிலையில், கோயில் நிா்வாகம் கைப்பற்றிய 1.40 ஏக்கா் நிலத்தை அறக்கட்டளை நிா்வாகிகள் எனக் கூறி முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு நபா்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.

ரூ.2 கோடி மதிப்பு என நிலத்தை குறைவாக மதிப்பீடு செய்து, பழனி சாா்பதிவாளா் அலுவலகத்தில் இருவருக்கு நிலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பழனி சாா் பதிவாளா் விடுமுறையிலிருந்த நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்த கொடைக்கானல் சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், பழனி கோயில் தரப்பில் பத்திரப்பதிவு ஆணையா், துணை ஆணையா், மாவட்டப் பதிவாளா் ஆகியோருக்கும், பழனி அடிவாரம் காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டது.

முதல்கட்டமாக சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், வெள்ளத்துரை, சேதுபதி, முருகதாஸ் ஆகியோா் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்தது செல்லாது, பத்திரப் பதிவுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்வதாக தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Palani temple land fraud case transferred to CB-CID: Tamil Nadu Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.