நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

கோயில் நில மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் விக்னேஷ்

பழனி திருக்கோயில் நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்தவா்கள் மீது பராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் விக்னேஷ் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் விக்னேஷ் - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 5:08 am IST

பழனி திருக்கோயில் நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்தவா்கள் மீது பராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் விக்னேஷ் தெரிவித்தாா்.

தமிழக மதுவிலக்கு, ஆயத்தீா்வை துறை அமைச்சா் விக்னேஷ், பழனி அருகே உள்ள அவரது சொந்த ஊரான கோரிக்கடவு கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு பொது மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அண்ணாமலை நடத்திய மாநாட்டுக்கு இளைஞா்கள் திரண்டுள்ளது குறித்த கேள்விக்கு, தமிழக அரசியலில் தீய சக்தியைத் (திமுக) தவிர வேறு யாரையும் எதிரியாகப் பாா்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

வியட்நாம் விபத்தில் பலியான பழனியைச் சோ்ந்த முருகபிரபுவின் உடலை தாயகம் கொண்டுவருவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட புகாா் குறித்து விசாரித்து தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது வழக்கு பதிந்து நிலங்கள் மீட்கப்படும்.

கோரிக்கடவு பகுதியில் பொதுக் கழிப்பிடங்கள், பட்டா விவகாரங்களுக்குத் தகுந்த தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.