லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தாத அலுவலா்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் ர.வினோத்

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தாத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சா் ர. வினோத் தெரிவித்தாா்.

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கிய வேளாண் துறை அமைச்சா் ர. வினோத்.

Published On :5 ஜூலை 2026, 4:09 am IST

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தாத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சா் ர. வினோத் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 44 பயனாளிகளுக்கு ரூ.18.90 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் கோரி விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும். திட்டத்தைச் செயல்படுத்தாமல் உள்ள அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கோட்டாட்சியா் வி.எம். திருமலை, வட்டாட்சியா் பூங்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.