‘தமிழ்நாட்டில் மூக்கை நுழைப்பேன், யாராலும் தடுக்க முடியாது’: தமிழிசை செளந்தரராஜன்

தமிழ்நாட்டில் மூக்கையும், காலையும் நுழைப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியுள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. 
தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் மூக்கையும், காலையும் நுழைப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியுள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. 

தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை செளந்தரராஜன் 3 ஆண்டுகள் நிறைவானதைத் தொடர்ந்து சென்னையில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். 

ப்போது பேசிய அவர், “ஆளுநரால் பலரையும் வேலை செய்ய வைக்க முடியும். ஆளுநருக்குண்டான சலுகைகள் பல இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் இருக்கிறேன். என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்களே அதிகம். தமிழ்நாட்டில் கருத்து சொல்லிவிட்டால் மூக்கை நுழைப்பதாகத் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். யாரும் தடுக்க முடியாது" என்றார்.

தொடர்ந்து அவர், “என்னை தெலங்கானாவில் அக்கா என்றுதான் அழைக்கின்றனர். ஆனால் நான் தமிழ்நாட்டின் அக்கா என்பதை மறக்கவே மாட்டேன். ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது என அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. தமிழ்நாட்டில் ஏதாவது தவறு நடந்தால் சுட்டிக்காட்டி திருத்தச் செய்வேன். என்னைத் தடுப்பதற்கு யாராலும் முடியாது.

ஆளுநர் என்றாலே ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி. மக்களைப் பார்க்கக் கூடாது என நீதிபதி தெரிவித்ததாக நீதிமன்ற உத்தரவை காட்டுகின்றனர். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அப்படி இல்லை. தினசரி பணிகளில் தலையிடக் கூடாது என மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நான் இன்றைக்கு இந்தப் பணியிலிருக்கிறேன் என்றால் அது மக்களுக்காக. எனது பங்கு அரசியல் இருக்கும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com