பாஜக தலைவர்கள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்: அசோக் கெலாட்

பாஜக தலைவர்கள் முதலில் வரலாற்றை சரியாகப் படிக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்: அசோக் கெலாட்

பாஜக தலைவர்கள் முதலில் வரலாற்றை சரியாகப் படிக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யவர்தன் ரத்தோர், புதிதாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அந்த கட்சியின் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே எனக் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சரியான முறையில் நடைபெறவில்லை எனவும் ராஜ்யவர்தன் ரத்தோர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசோக் கெலாட் பேசியதாவது: இவர்களுக்கு வெட்கமே இல்லை. இப்போது புதிதாக சிலர் கிளம்பியுள்ளார்கள். அவர்கள் பேசுவதற்கு முன்பாக இந்தியாவின் வரலாறைப் படித்துவிட்டு பின்னர் பேச வேண்டும். அப்படி பேசினால் அவர்களுக்கு இதுபோன்ற சங்கடங்கள் நேராமல் இருக்கும். அவர்களுக்கு அறிவே கிடையாது. இதில் எதனை ரப்பர் ஸ்டாம்ப் எனக் குறிப்பிடுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் தேர்தல் முறையாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூரை மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இதனையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மதிக்கத்தக்க ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது சோனியா காந்தியே. இரண்டு முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தும் சோனியா காந்தி பிரதமராக மறுத்து விட்டார். சுதந்திரம் அடைந்த பின் 70 ஆண்டுகளில் என்ன நடந்தது என பாஜக கேட்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு 70 ஆண்டுகளில் எல்லாம் நடந்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஒரு குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலை கூட இந்தியாவில் கிடையாது.

இவர்கள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை தவறாக வழிநடத்தி செல்கிறார்கள். மதத்தின் பெயரால் இளைஞர்களின் வாழ்க்கையினை பாழாக்கி வருகின்றனர். காங்கிரஸ் குறித்து குறை கூறுவதை நிறுத்திவிட்டு தங்களது கட்சியில் உள்ள பிரச்னைகளை பாஜக முதலில் பார்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com