ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் நட்சத்திர உணவு விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் தனியார் நட்சத்திர உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த உணவு விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு கீழாண்டை தெருவை சேர்ந்த ரங்கநாதன்(51), நவீன்குமார்(30), திருமலை(18) ஆகியோர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்த போது கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விழவாயு தாக்கி ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோர் மயக்கம் அடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து கழிவுநீரில் மூழ்கி பலியாயினர்.

இதுகுறித்து உணவு விடுதி நிர்வாகத்தினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்றிவிட்டு சுமார் 1 மணி நேர முயற்ச்சிக்கு பின் ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோரது சடலங்களை மீட்டனர்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் மூவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உணவு விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உணவு விடுதியின் மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
விஷவாயு தாக்கி ஒரே பகுதியைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் கச்சிப்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
நீட் தேர்வெழுதுவோரில் 35% பேர் வெறும் 3 மாநிலங்களைச் சேர்ந்தோர்! அதிர்ச்சி தரும் தரவுகள்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



