
தமிழகத்தில் பட்டாசு தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழுவதும் தீபாவளியன்று வெடி வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகளில் சுமார் 500 பேர் காயமடைந்தனர். 179 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட நிலையில் 345 பேர் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று திரும்பினர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிக்க: வாட்ஸ்ஆப் செயல்படத் தொடங்கியது
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பட்டாசு தீ விபத்தில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை தர தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.