சேலம்: பட்டாசு தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

சேலத்தில் பட்டாசு வெடித்த தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலை முழுவதும் தீக்கிரையானது.
சேலம்: பட்டாசு தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலையில் தீ விபத்து
Updated on
1 min read

சேலம்: சேலத்தில் பட்டாசு வெடித்த தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலை முழுவதும் தீக்கிரையானது.

ககிடங்கில் இருந்த 50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், நூல் உள்ளிட்டவைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

சேலம் குகை இராமலிங்கம் தெரு பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நூல் உற்பத்தி செய்யும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதில், தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் அதற்கான நூல், துணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு இப்பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்டு வந்துள்ளது.

அப்பொழுது பட்டாசு வெடித்து, தீப்பொறி முதல் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக நூல்கள் வைக்கப்பட்டுள்ள குடோனுக்குள் விழுந்தது. அப்பொழுது லேசாக பற்றிய நெருப்பு மளமளவென பரவி குடோனில் வைக்கப்பட்டிருந்த நூல் உற்பத்தி  இயந்திரங்கள், நூல்கள், துணிகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் பற்றி எரியத் துவங்கியது. மேலும் செவ்வாய்ப்பட்டை  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீயை அணைப்பதற்குள் குடோனில் வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான அனைத்து பொருட்களும் தீக்கரையானது.

இந்த தீயை  5 வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கொண்டு போராடி அணைக்கப்பட்டது. இது தொடர்பாக செவ்வாய்பேட்டை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com