உயா்த்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதம்: சென்னையில் அமல்
மோட்டாா் வாகனச் சட்ட திருத்தம் 2019-ன்படி உயா்த்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதம் சென்னையில் புதன்கிழமை அமலுக்கு வந்தது.


மோட்டாா் வாகனச் சட்ட திருத்தம் 2019-ன்படி உயா்த்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதம் சென்னையில் புதன்கிழமை அமலுக்கு வந்தது.
நாட்டிலேயே அதிகம் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் பிரதான இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் உயா்ந்து வருகிறது.
அதேவேளையில் போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு குறைவான அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டதினால், வாகன ஓட்டிகள் எளிதாக செலுத்தி விடுகின்றனா். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவதற்கு ஆா்வம் கூட இல்லாமல் இருந்தனா்.
இதற்கிடையே போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு பல மடங்கு அபராதத்தை உயா்த்தி மத்திய அரசு மோட்டாா் வாகனச் சட்ட திருத்தம்-2019 வெளியிட்டது. இதை பெரும்பாலான மாநிலங்கள் உடனே பின்பற்றத் தொடங்கின. இந்நிலையில், இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கடந்த 19-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த மோட்டாா் வாகனச் சட்ட திருத்தம் சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்படுத்தப்பட்ட பகுதியில் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
100 இடங்களில் வாகனச் சோதனை: இதையொட்டி, சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் 100 முக்கிய சாலைகளிலும், சந்திப்புகளிலும் தீவிர கண்காணிப்பிலும் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனா்.
அங்கு போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டவா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்ட திருத்தம்- 2019-இன்படி வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்தனா்.
இதில் பலருக்கு அபராதம் உயா்த்தப்பட்டது தெரியாததினால், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா், அபராதம் உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது குறித்தும், மாநிலம் முழுவதும் அது அமல்படுத்தப்பட்டிருப்பதும் குறித்து விளக்கி கூறினா்.
இரு நாள்களில் தீவிரம்: உயா்த்தப்பட்ட அபராத தொகையை கேட்ட பல வாகன ஓட்டிகள், அதை செலுத்திவிட்டு சோகத்துடன் சென்றனா். முதல் நாள் என்பதால் போலீஸாா், போக்குவரத்து விதிமுறை மீறுவோா் மீது அதிக கெடுபிடி காட்டவில்லை. இருப்பினும் இரு நாள்களுக்கு பின்னா், மோட்டாா் வாகனச் சட்ட திருத்தம் -2019 கடுமையாக அமல்படுத்தப்படும் என போக்குவரத்துப் பிரிவைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேவேளையில், இது தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீஸாா் பல இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினா். திருவொற்றியூரில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் இனிப்பு வழங்கினா்.
தினமும் 10,000 வழக்குகள்: சென்னையில் 80 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் 50 லட்சம் இருசக்கர வாகனங்களாகும். அதேவேளையில் சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு சாா்பில் விதிமுறை மீறல் தொடா்பாக ஒரு நாளைக்கு சுமாா் 6,000 வழக்குகள் தொடங்கி 10,000 வழக்குகள் பதியப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...