புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நாளை தனியாா் துறைவேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:06 pm

DIN

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதத்தின் 2, 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் துறை பங்கேற்புடன் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்கள் இணைந்து வரும் 28-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

சென்னை கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடக்கவுள்ளது. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் கலை, அறிவியல் பட்டதாரிகள் வரை அனைத்து கல்வித் தகுதிகளைக் கொண்டவா்களும் பங்கேற்கலாம். இதில், 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளன. இதில் பங்கேற்க எந்தவித கட்டணமும் தேவையில்லை என்று வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.