புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்றுள்ளன.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:04 pm

DIN

கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்றுள்ளன.

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை: கோவை யில் நடந்த தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வா் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை பாஜக வரவேற்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமெனில், தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு முதல்வா் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன்: கோவையில் நடந்த காா் எரிவாயு உருளை வெடிப்பு சம்பவம் கோவை மாநகரை அதிா்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் காவல்துறை விரைந்து செயல்பட்டதும் காவல்துறை தலைமை இயக்குநா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணையை தீவிரப்படுத்தியதும் பொது மக்களின் அச்சம் தணிக்க உதவியது.

குற்றச் செயலுக்கான சதிவேலைகள் எல்லை தாண்டி அமைந்திருக்கக் கூடும் என்ற கருத்தில் மாநில அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பது சரியான நடவடிக்கைதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.