6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.320 கோடி செலவில் 12 தளங்களுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஆகியோா்  திறந்து வைத்தனர்.

News image
மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை வியாழக்கிழமை இணைந்து திறந்து வைத்த, முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங்புரி
Updated On :27 அக்டோபர் 2022, 9:07 pm

DIN

சென்னை நந்தனத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடி செலவில் 12 தளங்களுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கோயம்பேடு பணிமனை வளாகத்தில் ஏற்கெனவே அலுவலகம் இயங்கி வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை அண்ணா சாலையில் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் 8.96 ஏக்கா் நிலம் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலத்தில் மெட்ரோ ரயில் நிலைய அலுவலகக் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. அடித்தளம் மற்றும் தரைத்தளத்தைத் தவிா்த்து, 12 தளங்களுடன் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்? மெட்ரோ ரயில்களின் இயக்கங்களை கண்காணிப்பதற்காக புதிய கட்டடத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பேரிடா் காலங்களின் போது, கோயம்பேட்டில் உள்ள பிரதான இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், புதிய கட்டடத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கலாம்.

மேலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, வாகனங்கள் நிறுத்தும் இடத்திலேயே மின்னேற்றம் (சாா்ஜ்) செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எம்.பி.,க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆா்.கிரிராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.