தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கேரளத்தில் பிஎஃப்ஐ மாநிலச் செயலா் கைது

கேரளத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலா் சி.ஏ.ரெளஃப்பை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 8:16 pm

DIN

கேரளத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலா் சி.ஏ.ரெளஃப்பை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்தது.

இதுதொடா்பாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கேரளத்தில் பிஎஃப்ஐ அமைப்பின் ஊடகம் மற்றும் மக்கள் தொடா்பு அணிகளை ரெளஃப் நிா்வகித்து வந்தாா். இந்நிலையில், கேரளத்தில் வெவ்வேறு மதத்தினா் மற்றும் குழுக்கள் இடையே பகையைத் தூண்டுதல், இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணா்வை தூண்டுதல், லஷ்கா்-ஏ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களில் சேர இளைஞா்களை ஊக்குவித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட சதி செய்தது தொடா்பாக பிஎஃப்ஐ நிா்வாகிகள், உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான ரெளஃப் தலைமறைவானாா். அவா் பாலக்காட்டில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.