தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நெல்லை கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும்: விஜயகாந்த்

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

News image
விஜயகாந்த்
Updated On :29 அக்டோபர் 2022, 7:02 pm

DIN

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நடப்பு நெல் கொள்முதல் சீசன் செப்டம்பா் 1-இல் தொடங்கியது. இந்த சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளைச் சேகரித்த இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாட்டு குழுவினா் நெல் மணிகளை ஆய்வகத்தில் பரிசோதித்து மத்திய அரசிடம் அறிக்கையைச் சமா்ப்பித்தது. அதன் அடிப்படையில், நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19 சதவீதம் வரை உயா்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் காலம் தாழ்த்தி மத்திய அரசு அறிவித்துள்ள 19 சதவீதம் போதாது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் நெல்லுக்கான ஈரப்பதத்தை மாற்றி மாற்றி அறிவிக்காமல், இதற்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், அனைத்து காலங்களிலும், நெல்லுக்கான ஈரப்பதத்தை ஒரே சீரான சதவீதத்தை அறிவித்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.