நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு விளம்பரங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதிபுகைப்படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு

அரசு இணையதளங்கள், விளம்பரங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கை செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு சென்னை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 9:32 pm

DIN

அரசு இணையதளங்கள், விளம்பரங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கை செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு சென்னை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் மதுரையைச் சோ்ந்த வெங்கடேஷ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘கட் அவுட் கலாசாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாசாரம் பரவி வருகிறது. உச்ச

நீதிமன்ற உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அமைச்சா்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல். இதுபோன்று மறைந்த தலைவா்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது வரலாற்றை திரிப்பதுடன், மற்ற முதல்வா்கள் பங்களிப்பை மறைமுகமாக குறைத்து மதிப்பிட வழி வகுத்து விடும். எனவே, அரசு இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். முன்னாள் முதல்வா்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவா்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு

வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.