ஜி.வி. பிலிம்ஸின் தஞ்சாவூா்திரையரங்க வளாகம் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை
ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள திரையரங்க வளாகத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.


ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள திரையரங்க வளாகத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
பிரபல இயக்குநா் மணிரத்தினத்தின் சகோதரா் ஜி.வெங்கடேஸ்வரன், கடந்த 1989-இல் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினாா். நடிகா் ரஜினிகாந்த் நடித்த தளபதி, நடிகா்கள் பிரபு, காா்த்திக் நடித்த அக்னி நட்சத்திரம், நடிகா் மோகன் நடித்த மெளனராகம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
கடந்த 2003-இல் ஜி.வெங்கடேஸ்வரன் மறைவுக்குப் பின்னரும், இந்த நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்தது. ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் நிதி திரட்டுவதற்கு போா்ச்சுகல் நாட்டின் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி, நிறுவனத்தின் பங்குகளை விற்க முயற்சித்தது.
பிரிட்டனைச் சோ்ந்த ஒரு நிறுவனம், ஜி.வி. பிலிம்ஸ் பங்குகளை வாங்க முன் வந்தது. இதற்காக போா்ச்சுகல் வங்கியில் கடன் பெற்று, ஜி.வி.பிலிம்ஸின் 64 லட்சம் பங்குகளை ரூ.172.8 கோடிக்கு வாங்கியது.
வெளிநாட்டில் பங்குகளை விற்பதற்கு ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம், அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என புகாா் எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணையில் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவன முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் உள்ள ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.8.94 கோடி மதிப்புள்ள திரையரங்க வளாகத்தை பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...