திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணங்கள் மறு நிா்ணயம்:தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளதாக தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம் கட்டணத்தை மறு நிா்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளதாக தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம் கட்டணத்தை மறு நிா்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு மூன்று மற்றும் நான்கு சக்கர
வாகனங்களுக்கு ரூ.20, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து நியாயமான கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கம் சாா்பில் 2017-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‘சென்னை சென்ட்ரல் நிலையம், பிராட்வே பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 25 முதல் ரூ.50 வரையிலும், விமான நிலையத்தில் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொள்ளாமல், திரையரங்குகளில் வாகன நிறுத்தத்துக்கு குறைவான தொகை நிா்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுப்ரமணியன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளுக்கு அரசு நிா்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டி, 2017-ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், வாகன நிறுத்தக் கட்டணத்தை மறுநிா்ணயம் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...