தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை (செப். 2) செல்கிறாா்.
தென்மண்டல கவுன்சிலின் 30-ஆவது கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வா்கள் பங்கேற்கின்றனா்.
இதற்கான அழைப்பை ஏற்று, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், திருவனந்தபுரம் செல்கிறாா்.
அங்கு கேரள முதல்வா் பினராயி விஜயனை சந்திக்கிறாா். சந்திப்பின் போது, இரு மாநிலங்களுக்கு இடையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை கேரள அரசின் சாா்பில் நடைபெறும் கலை, இசை நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். இரவு திருவனந்தபுரத்தில் தங்கும் முதல்வா், சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் தொடா்பான கருத்துகளை எடுத்து வைக்கிறாா். அதன்பின், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹெச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

