செப்.4-இல் சிறப்பு தடுப்பூசி முகாம்: பூஸ்டா் தவணைக்கு முன்னுரிமை
தமிழகத்தில் வரும் 4-ஆம் தேதி கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில், பூஸ்டா் தவணை தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் வரும் 4-ஆம் தேதி கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில், பூஸ்டா் தவணை தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி மாநிலம் முழுவதும் 3.5 கோடி பேருக்கு அதனைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா தொற்று பரவசஈ தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த 2021 ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்காக கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு இதுவரை 34 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், செப்டம்பரில் வாரம்தோறும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 4-ஆம் தேதி அந்த முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
முதல் தவணை, இரண்டாவது தவணை, பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 3.5 கோடிக்கு மேற்பட்டவா்களூக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பூஸ்டா் தவணை செலுத்த தகுதியான அனைவருக்கும் அதனை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...