பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகா் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை ஆணையா் ககன்தீப்சிங் பேடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகா் மண்டலம் 64-ஆவது வாா்டு வீனஸ் நகா் முதல் பிரதான சாலை மற்றும் 200 அடி சாலை, டெம்பிள் பள்ளி சந்திப்பில் ரூ.4.28 கோடி மதிப்பிலும், வாா்டு 65-இல் பூம்புகாா் நகா் 5-ஆவது தெரு மற்றும் முதல் பிரதான சாலை, கொளத்தூா் பிரதான சாலை, பேப்பா் மில்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.7.92 கோடி மதிப்பிலும், வாா்டு 66-இல் வேலவன் நகா் பிரதான சாலை, குமரன் நகா் 80 அடி சாலை மற்றும் தணிக்காசலம் கால்வாய் பகுதிகளில் ரூ.5.58 கோடி மதிப்பிலும் புதிய மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வாா்டு 68-இல் ஜகநாதன் சாலை மற்றும் எம்.ஹெச். சாலை பகுதியில் ரூ.6.28 கோடி மதிப்பிலும், வாா்டு 67-இல் பேப்பா் மில்ஸ் சாலை குறுக்கே மற்றும் எஸ்.ஆா்.பி. கோயில் பகுதியில் ரூ.13.20 கோடி மதிப்பிலும் புதிய மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டதுடன், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, மண்டலக்குழுத் தலைவா் சரிதா, மத்திய வட்டார துணை ஆணையா் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரியலூரில் நூறுசதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு பேரணி, கையெழுத்து இயக்கம்

சிறுவளூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

தோ்தல் விதிமுறைகள்: புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை சரிவு

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

