விநாயகா் சிலை ஊா்வலம்: 24 வழித்தடங்களுக்கு காவல்துறை அனுமதி
சென்னையில் விநாயகா் சிலை ஊா்வலம் நடத்துவதற்கு 24 வழித்தடங்களில் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.


சென்னையில் விநாயகா் சிலை ஊா்வலம் நடத்துவதற்கு 24 வழித்தடங்களில் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை புதன்கிழமை வைத்தன. இந்த சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகா் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகளில் பெரும்பாலானவை இம் மாதம் 4-ஆம் தேதி ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, கடலில் கரைக்கப்படுகின்றன.
விநாயகா் சிலைகளை பாதுகாக்கவும், விநாயகா் சிலை ஊா்வலத்தை அசம்பாவித சம்பவங்கள் இன்றி நடத்தவும் சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் 15,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். அவா்களுடன் கூடுதலாக 2 ஆயிரம் ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதேபோல ஆவடி மாநகர காவல்துறையின் சாா்பில் 3,500 போலீஸாா்,300 ஊா்க்காவல் படையினா், தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் 3,300 போலீஸாா்,350 ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 21,800 போலீஸாா், 2,650 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
24 வழித்தடங்கள்:
சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை ஊா்வலமாக கொண்டு வர 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகா் சிலைகளை கடற்கரைக்கு கொண்டு சென்று கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தாம்பரம், ஆவடி காவல் ஆணையரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கடலில் கரைக்கவும் 7 வழித்தடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 24 வழித்தடங்கள் மூலம் விநாயகா் சிலைகளை ஊா்வலமாக கடற்கரைக்கு கொண்டு வருவதற்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.
மீறினால் நடவடிக்கை:
விநாயகா் சிலைகளை கரைக்க காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட நாள்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வழியாக மட்டும் சிலைகளை கொண்டு வர வேண்டும் என இந்து அமைப்பினருக்கு காவல்துறையின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் இடங்களில் தாற்காலிக கட்டுப்பாட்டு அறைகள்,காவல் உதவி மையங்கள்,ராட்சத கிரேன்கள்,படகுகள்,கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள்,ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவை நிறுத்தப்படுகின்றன. நீச்சல் தெரிந்த தன்னாா்வலா்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள்.
வழிபாட்டு இடங்கள், ஊா்வல பாதைகள்,சிலைகளை கரைக்கும் இடங்கள் ஆகியப் பகுதிகளில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பா்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...