பூலித்தேவன் பிறந்த நாள்: பிரதமா் மோடி, தமிழக அமைச்சா்கள் மரியாதை
மாவீரன் பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமா் மோடி, தமிழக அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனா்.


மாவீரன் பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமா் மோடி, தமிழக அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாவீரன் பூலித்தேவனுக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிா்த்துப் போரிட்டவா். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவா்’ என்று மோடி குறிப்பிட்டுள்ளாா்.
தமிழக அமைச்சா்கள்
சுதந்திர போராட்ட வீரா் பூலித்தேவன் 307-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெல்கட்டும்செவலிலுள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சாா்பில் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சா் தங்கம்தென்னரசு ஆகியோா் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், தென்காசி ஆட்சியா் ப. ஆகாஷ், எம்.பி. தனுஷ் எம். குமாா், சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா, திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், ஊராட்சித் தலைவா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...