
இணைய வழி குற்றங்களை கண்டுபிடிக்க 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இணைய வழி குற்றங்களை தடுக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:
இணைய வழி குற்றங்களை கண்டுபிடிக்க 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் 37 மாவட்டங்களிலும் சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்கள், பண மோசடி போன்ற சைபர் குற்றங்களை கண்டுபிடிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கணினிசார் திறன், சைபர் தடய அறிவியலில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் சமூக ஊடகங்கள் இயங்கும் பொய்யான பதிவுகளை சமூக ஊடங்களில் பரப்புவோரை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த பதிவுகள் நீக்கப்படும். வதந்தி பரப்புவோரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கவும் கணினி சார் குற்ற வழக்குகளை பதிவு செய்யவும் குழு செயல்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.